உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தேங்காய் நார் தரை விரிப்பு அமைப்பு

நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தேங்காய் நார் தரை விரிப்பு அமைப்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், கோடை வெயில் தாக்கம் அதிகப்படியாக உள்ளது. நாள்தோறும், 107 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் காணப்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை காலம் என்பதால், நாமக்கல்லில் அமைந்துள்ள நரசிம்மர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குடைவரை கோவில் என்பதாலும், கோவில் வளாகம் முழுதும் தரைத்தளம் பாறை கற்களால் உருவாக்கப்பட்டுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகப்படியாக உள்ளது. வெளியூர் பக்தர்கள் வெப்பம் தாங்காமல் கோவில் வளாகத்தில் நடக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, கோவில் வளாகத்தில் தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட சிகப்பு நிறத்தினாலான தரை விரிப்புகளை, கோவில் நிர்வாகம் அமைத்துள்ளது. மேலும், அந்த விரிப்புகள் மீது நீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கின்றனர். காலை, 9:00 மணியளவிலும், மாலை, 4:00 மணியளவிலும் இருமுறை தரை விரிப்புகள் நீரால் குளிர்விக்கப்படுகின்றன. அதேபோல், நரசிம்மர் கோவிலில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை புதிய தேங்காய் நார் மேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை