உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராசிபுரம்;ராசிபுரம் நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு சென்று, 100க்கும் மேற்பட்ட தற்காலிக துாய்மை பணியாளர்கள், குப்பை சேகரிக்கின்றனர். இவர்கள், நேற்று ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தட்டான்குட்டை ஏரி பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை வளாகம் முன் திரண்டு, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள், எங்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை. மாதந்தோறும் கால தாமதமாக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால் குடும்பம் நடத்தவே கஷ்டமாகவே உள்ளது. மேலும், பணியில் சேரும் போது கூறிய சம்பளத்திற்கு பதில், குறைவாக வழங்குகின்றனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்