உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தர்மர், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தர்மர், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை, திம்மநாயக்கன்பட்டியில் வரலாற்று சிறப்புமிக்க தர்மர், திரவுபதி அம்மன், குந்தி தேவி உள்பட பஞ்ச பாண்டவர்களுக்கு கோவில் அமைந்துள்ளது. 100 ஆண்டு பழமையான இக்கோவில் கும்பாபிஷேகம், 80 ஆண்டுக்கு பின் இன்று நடக்கிறது.முன்னதாக, நேற்று கணபதி பூஜையுடன் யாக சாலை தொடங்கியது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து அம்மனுக்கு சீர் தட்டு கொண்டுவந்து படைத்தனர்.இன்று காலை, 5:00 மணிக்கு மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, யாத்ரா தானம், உபசார பூஜையுடன் கலசங்கள் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. காலை, 9:00 மணிக்கு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மஹா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது.கும்பாபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பழம், பட்டு, அன்னதானத்திற்கு அரிசி ஆகியவை பக்தர்கள் வழங்க விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ