உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் மீது தனியார் பஸ் மோதி சாயப்பட்டறை தொழிலாளி சாவு

டூவீலர் மீது தனியார் பஸ் மோதி சாயப்பட்டறை தொழிலாளி சாவு

குமாரபாளையம்: டூவீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், சாயப்பட்டறை தொழிலாளி பலியானார். குமாரபாளையம், வளையக்காரனுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 24; சாயப்பட்டறை தொழிலாளி. இவர், நேற்று காலை, 7:45 மணியளவில் மளிகை கடைக்கு செல்ல, 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில், பல்லக்காபாளையம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், சதீஷ்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ-தித்த டாக்டர், சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். குமா-ரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர், ஆத்துார், கீரிப்பட்டியை சேர்ந்த கோபி, 28, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை