உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராசிபுரம் பகுதியில், 2024--25ம் ஆண்டின், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், காரீப் பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படவுள்ளது.இதில், பாசிப்பயறுக்கு பிரிமீய தொகையாக ஏக்கருக்கு, 304.30- ரூபாய், நிலக்கடலைக்கு, 420.89- ரூபாய், சோளம், 136.80- ரூபாய், மக்காச்சோளம், 638.25- ரூபாய், பருத்திக்கு, 499.80- ரூபாய், சின்ன வெங்காயம், 1,230.06- ரூபாய், தக்காளிக்கு, 1,017.64- ரூபாய், மரவள்ளிக்கு, 619.48- ரூபாய், மஞ்சளுக்கு, 3,215.94- ரூபாய், வாழைக்கு, 1,857.44- ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு குறிப்பிட்ட தேதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.எனவே, காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ காப்பீடு செய்யலாம்.கடன்பெறா விவசாயிகள், பொது சேவை மையங்களிலோ அல்லது தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் உள்ள, 'விவசாயிகள் கார்னரில்' நேரிடையாகவோ காப்பீடு செய்யலாம்.கூடுதல் விபரங்களுக்கு, ராசிபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்களை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை