உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டுமல்லி கிலோ ரூ.500க்கு விற்பனை

குண்டுமல்லி கிலோ ரூ.500க்கு விற்பனை

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், குண்டுமல்லி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விளைந்த பூக்களை, நாள்தோறும் பறித்து நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பூ மார்க்கெட்டுக-ளுக்கு கொண்டு சென்று ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.ஆடி மாதம் பிறந்ததையடுத்து, முகூர்த்த நாட்கள் இல்லாததால் மல்லிகை பூக்கள் விலை கிலோ, 250 ரூபாயாக குறைந்தது. இந்-நிலையில், இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, நேற்று குண்டுமல்லி பூக்கள் விலை கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை பூ, 350 ரூபாய், அரளி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை