உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

கொல்லிமலையில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம்;கொல்லிமலையில், நேற்று பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்தது போல், நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையிலும் இந்தாண்டு போதிய மழையில்லாததால் கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதனால், மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு கடந்த, 20 ஆண்டுகள் இல்லாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், மலைவாழ் மக்கள் முதன் முதலாக தண்ணீர் லாரியில் குடிநீர் பிடித்து பயன்படுத்தினர். இந்நிலையில், நேற்று கொல்லிமலையில் உள்ள சோளக்காடு, செம்மேடு, வளப்பூர் நாடு உள்ளிட்ட மலையின் பெரும்பாலான பகுதிகளில், மதியம் முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து வீதிகளில் சென்றது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் நிம்மதி அடைந்தனர். * வெண்ணந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசத் தொடங்கியது. கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதி மக்கள், மழையால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ