உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதிய தகவல் கிடைக்காததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சுணக்கம்

போதிய தகவல் கிடைக்காததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சுணக்கம்

‍சேந்தமங்கலம் : டாஸ்மாக் பணியாளரை, மர்ம நபர்கள் வெட்டிய வழக்கில், குற்றவாளிகள் குறித்து போதிய தகவல்கள் கிடைக்காததால், அவர்களை பிடிப்பதில் போலீசார் சுணக்கம் காட்டி வருகின்றனர்.சேந்தமங்கலம் அருகே, நைனாமலை ரோடு, சாலையூர் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்தவர் பணரோசா, 46. இவரும், இவருடன் பணியாற்றி வந்த உதயகுமார், கோகிலன் உள்ளிட்ட, 4 பேர் கடந்த, 26ல் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், 3 டூவீலர்களில் வந்து பணரோசாவின் கையை வெட்டியுள்ளனர். இதில் அவரது கை துண்டானது. குற்றவாளிகளை பிடிக்க, டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில், 6 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். இதில், 2 தனிப்படையினர் தர்மபுரி விரைந்த நிலையில், குற்றவாளிகள் குறித்து போதிய தகவல் கிடைக்காததால், அவர்களை பிடிப்பதில் போலீசார் சுணக்கம் காட்டி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை