உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கனவு இல்லம் திட்டத்தில் 34 பேருக்கு ஆணை

கனவு இல்லம் திட்டத்தில் 34 பேருக்கு ஆணை

சேந்தமங்கலம்;கொல்லிமலை யூனியன், செங்கரை, எடப்புளிநாடு, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார், 34 பயனாளிகளுக்கு, 1.19‍ கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: கொல்லிமலை பகுதியில் பொது மக்களின் நலன் கருதி, 5 மொபைல் போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய காலத்தில் இணையதள வசதி அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். அனைத்து பகுதிகளிலும் சாலைவசதி, குடிநீர்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். அட்மா குழு தலைவர் ‍அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை