உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அறிவுசார் மையத்தை பயன்படுத்த நகராட்சி கமிஷனர் அறிவுரை

அறிவுசார் மையத்தை பயன்படுத்த நகராட்சி கமிஷனர் அறிவுரை

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியில், அறிவுசார் மையத்தை பயன்படுத்தி, மாணவ, மாணவியர் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள, நகராட்சி கமிஷனர் குமரன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: குமாரபாளையம் நகராட்சியில், 1.92 கோடி ரூபாயில் அறிவுசார் மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படுகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், சிறுவர், சிறுமியர்களுக்கான புத்தகங்கள், தமிழ், ஆங்கில நாளிதழ்கள் உள்ளன. இணைய வசதியுடன் கூடிய கணினி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவுத்திறன்களை மேம்படுத்த, 'ஸ்மார்ட் கிளாஸ்' போன்றவை அமைக்கப்பட்டு, தலைச்சிறந்த நிபுணர்களால் வாரந்தோறும் வகுப்புகள், கருத்தரங்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியர் இந்த அறிவுசார் மையத்தை பயன்படுத்தி, அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி