உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையம் 51 இடங்களில் திறப்பு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையம் 51 இடங்களில் திறப்பு

எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியனில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட படிக்க, எழுத தெரியாதவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் முதல் நடத்தப்பட்டு வந்தது.இதில், எருமப்பட்டி யூனியனில் பல பஞ்.,களில் எழுத படிக்க தெரியாதவர்கள், 780 பேர் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு, 51 தன்னார்வலர்கள் மூலம், 51 மையங்களில், 'புதிய பாரத எழுத்தறிவு' திட்ட கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த மையங்களை வட்டார கல்வி அலுவலர் அருண் திறந்து வைத்தார்.ஆசிரியர் பயிற்றுநர்கள் முகம்மது நிஜாம், கற்பகம், பெரியசாமி, தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ