உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் லோக்சபா தேர்தலில் 41 வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்பு: 6 பேரின் மனுக்கள் தள்ளுபடி

நாமக்கல் லோக்சபா தேர்தலில் 41 வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்பு: 6 பேரின் மனுக்கள் தள்ளுபடி

நாமக்கல்: லோக்சபா தேர்தலில், 6 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 41 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.நாமக்கல் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த, 20ல் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இத்தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தனர்.இதில், கொ.ம.தே.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் கட்சி மற்றும் அவர்களுக்கான மாற்று வேட்பாளர்கள், மற்ற கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை என, மொத்தம், 47 வேட்பாளர்கள், 58 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமையில், நேற்று நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலை வகித்தார்.அவற்றில், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி, பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம், நா.த.க., வேட்பாளர் கனிமொழி மற்றும் முக்கிய கட்சிகள் என, மொத்தம், 41 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.கொ.ம.தே.க., மாற்று வேட்பாளர் நடராஜன், அ.தி.மு.க., மாற்று வேட்பாளர் யாழினி, பா.ஜ., மாற்று வேட்பாளர் ராஜேஸ்குமார், இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் சின்னதம்பி, சுயேச்சை வேட்பாளர்கள் செல்வராஜ், முத்துசாமி ஆகிய, 6 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கூடுதலாக தாக்கல் செய்த வேட்புமனுக்கள் உள்பட, மொத்தம், 17 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.'நாளை (மார்ச், 30) வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். நாளை மாலை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை