உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

எருமப்பட்டி, நிலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில், 170 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எருமப்பட்டி யூனியனில், 2024-25ம் கல்வியாண்டிற்கான தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம், இரு கட்டங்களாக நடந்தது. ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வேலு தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் அருண், மேற்பார்வையாளர் பழனிவேலு தொடங்கி வைத்தனர். இதில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் செல்வம் பயிற்சியை பார்வையிட்டதுடன், பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்தல், செயல்பாடுகள் மூலம் வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்த கருத்துகளை எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை முகமது நிஜாம், பெரியசாமி, தனபால் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி