மேலும் செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
8 hour(s) ago
5 நாட்கள் மழைக்கு வாய்ப்பில்லை
8 hour(s) ago
வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம்
8 hour(s) ago
ரூ.2.80 கோடிக்கு மாடுகள் விற்பனை
8 hour(s) ago
தி.கோடு:தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள, ஒடிசா மாநில கூட்டுறவுத்துறையின் கூடுதல் செயலர் சுபரா மொகந்தி தலைமையில், கூடுதல் பதிவாளர் சுஸ்காந் குமார் பண்டா, இணைப்பதிவாளர் தமயந்தி சிங், துணைப்பதிவாளர் ரீஜுகல் கிஷோர் தாஸ், ஒடிசா மாநில கூட்டுறவு வங்கி பொது மேலாளர் அச்சுதானந்தா பத்ரா ஆகியோர் கொண்ட குழுவினர், தமிழகத்திற்கு வந்துள்ளனர்.அக்குழுவினர், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு வருகை தந்து, சங்கத்தின் செயல்பாடுகள், எண்ணெய் பதனிடும் ஆலை, மஞ்சள் அரவை ஆலை, தேங்காய் எண்ணெய் குளியல் சோப் உற்பத்தி பிரிவு மற்றும் சுயசேவை பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.செயலாட்சியர் விஜயசக்தி, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். சங்கத்தை பார்வையிட்ட ஒடிசா குழுவினர், கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். சரக துணைப்பதிவாளர் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago