உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிதி நிறுவனம் மோசடி கலெக்டரிடம் கதறிய மக்கள்

நிதி நிறுவனம் மோசடி கலெக்டரிடம் கதறிய மக்கள்

நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலை, சந்தைப்பேட்டைபுதுாரில் பிரபல நிதி நிறுவனம், 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில், நாமக்கல், மோகனுார், ப.வேலுார், ராசிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். அந்த பணத்திற்கு, 100க்கு, ஒன்றேகால் ரூபாய் வட்டி தந்துள்ளனர். அவற்றை நம்பி, பலரும் இந்த நிதி நிறுவனத்தில் டிபாஸிட் செய்தனர். துவக்கத்தில், முதலீடு செய்தவர்களுக்கு முறையாக வட்டி தொகை தரப்பட்டது.இந்நிலையில், கடந்த மார்ச்சில் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் நிர்வாகி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர். 'இந்த நிதி நிறுவனத்தை நம்பி ஏராளமானோர் பணம் கட்டியுள்ளதாகவும், 200 கோடி ரூபாய் வரை, நிதி நிறுவன அதிபர் சுருட்டி கொண்டு தலைமறைவாகி விட்டார். அந்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !