உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்

100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்

ப.வேலுார், -- தமிழக முழுவதும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு, 100 நாள் வேலை கொடு, வேலை கொடுக்க முடியாவிட்டால் சட்டப்படி உரிய நிவாரணம் வழங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து, ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று, பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தம்பூண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்தனர். சித்தம்பூண்டி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் திரளாக சென்று, பஞ்சாயத்து அதிகாரிகளிடம் மனு அளித்து, அதற்குண்டான ஒப்புகை சீட்டு பெற்றுக் கொண்டனர். மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் பழனி வேல், சண்முகசுந்தரம் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி