உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தனியார் இடத்தை ஆக்கிரமித்து பி.டி.ஓ., கட்டிய சாக்கடை:பஞ்.,தலைவர் அப்ரூவல்

தனியார் இடத்தை ஆக்கிரமித்து பி.டி.ஓ., கட்டிய சாக்கடை:பஞ்.,தலைவர் அப்ரூவல்

ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே கோப்பணம்பாளையம் கிராம பஞ்.,க்குட்பட்ட மேற்கு வண்ணாந்துறையில், கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், சாக்கடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. மேற்கு வண்ணாந்துறை பகுதியில், அப்போதைய பணியில் இருந்த கபிலர்மலை பி.டி.ஓ., ஆய்வு செய்த போது, இந்த இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா இடம், அந்த இடத்தில் சாக்கடை கட்ட ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டதுஇந்நிலையில் கடந்த, 4ம் தேதி இரவு ஒரே நாளில் அப்பகுதியில் சாக்கடை கட்டியுள்ளனர். தனது இடத்தில் சாக்கடை கட்டியுள்ளதால், இடத்தின் உரிமையாளர் கோப்பணம்பாளையத்தை சேர்ந்த பாலுசாமி, 59, அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து பாலுசாமி கூறுகையில்,''எனக்கு சொந்தமான இடத்தில், சாக்கடை கட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நான் மறுத்து விட்டேன். இந்நிலையில் எனக்கு தெரியாமல் கடந்த, 4ம் தேதி இரவு சாக்கடை கட்டியுள்ளனர். இதை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கோப்பணம்பாளையம் பஞ்., தலைவர் அன்பழகன் கூறுகையில்,'' சாக்கடை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது. மூன்று ஆண்டாக கிடப்பில் போடப்பட்டது. என்னிடம் தெரிவிக்காமல், கபிலர்மலை பி.டி.ஓ., ராஜேந்திரபிரசாத், கவுன்சிலர் பழனியப்பன் ஆகியோர் சேர்ந்து தனியாருக்கு சொந்தமான மூன்று சென்ட் இடத்தில் சாக்கடை கட்டியுள்ளனர். இந்த பிரச்னை விஸ்வரூபமாக வெடித்துள்ளது,'' என்றார்.கபிலர்மலை பி.டி.ஓ., ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ''இந்த இடத்தில் சாக்கடை கட்ட என்னிடம் அனுமதி கேட்டபோது மறுத்து விட்டேன். கவுன்சிலர் பழனியப்பன் கொடுத்த நெருக்கடியால் ஒப்புதல் அளிக்க நேர்ந்தது. இடத்தின் உரிமையாளர் புகாராக எந்த மனுவும் இதுவரை எனக்கு தரவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ