உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காகித உற்பத்தி, தரம் குறித்து குறுகிய கால பாடத்திட்டம்

காகித உற்பத்தி, தரம் குறித்து குறுகிய கால பாடத்திட்டம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் சேஷசாயி காகித ஆலை உள்ளது. இந்த ஆலை நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் காகித கூல், காகித தயாரிப்பு, உற்பத்தி, தரம் செய்வது குறித்து, குறுகிய கால பாடத்திட்டத்தை, இலவசமாக நடத்தி வருகிறது.அதன்படி, இந்தாண்டு, சேஷசாயி காகித ஆலை வளாகத்தில், 12வது பாடத்திட்ட வகுப்பை, கடந்த, 21ல் காகித ஆலை நிர்-வாக இயக்குனர் காசிவிஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில், காகிதம் தயாரிக்கும் செயல்முறை, காகிதத்தின் தரத்தை உறுதி செய்வதற்கு செய்யப்படும் ஆய்வு, நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து செயல்முறையுடன் கற்பிக்கப்பட்டது. மேலும், ஆலையில் நேரடியாக காகிதம் தயாரிப்பு, தரம் ஆய்வு, இயந்-திரம் குறித்து நேரடியாக பார்வையிட்டனர்.காகிதமும், அச்சு தொழிலும் ஒன்றையொன்று சார்ந்துள்ள தொழில் என்பதால், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழ-கத்தை சேர்ந்த அச்சுநுட்ப வல்லுனர்கள், அச்சு பொறியாளர்-களின் தேவை குறித்து எடுத்துரைத்தார்.இந்த காகித தயாரிப்பு, தரம் குறித்து குறுகிய கால பாடத்திட்-டத்தில் சென்னை, மதுரை, மும்பை, கோல்கட்டா, டில்லி, நாக்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 47 பேர் கலந்து கொண்டனர். நிறைவு விழா, நேற்று மாலை நடந்தது. காகித ஆலை தலைவர் கோபால்ரத்தினம், குறு-கிய கால பாடத்தில் பயின்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை