குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையத்தில், எக்ஸல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கடந்த, 11 நாட்களாக கோடைகால சிறப்பு வகுப்புகள் நடந்தன. இதில், விளையாட்டு முறையில் ஆங்கிலம் கற்பித்தல், மாயாஜால கணிதம், சிலம்பம், யோகா, தமிழ் நாடகம், நெருப்பில்லாமல் சமைத்தல், ஓவியம், கைவினை பொருட்கள் தயாரித்தல், ஹிந்தி கற்பித்தல், எழுத்து பயிற்சி, மலை ஏறுதல், மேற்கத்திய நடனம், நடன உடற்பயிற்சி, கல்வி சுற்றுலா ஆகிவை மாணவர்களுக்கு கற்று தரப்பட்டன.இப்பயிற்சியின் நிறைவு விழா, நடந்தது. எக்ஸல் பப்ளிக் பள்ளி முதல்வர் சந்தானமோகன், இயக்குனர் கவியரசி மதன் கார்த்திக், பவானி, விஜய் விகாஸ் பள்ளி அறங்காவலர் உறுப்பினர் தவமணி, இவரது துணைவியார் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் உஷா சிவபிரகாசன், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.