உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விரைவாக குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கல்

விரைவாக குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கல்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, படவீடு டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும், தினமும் வீடு-தோறும் சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. தற்போது, குடியி-ருப்பு பகுதியில் விரைவாக குப்பை சேகரிக்க, 15 லட்சம் ரூபாயில், மூன்று புதிய பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று டவுன் பஞ்., வளாகத்தில் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் ராதாமணி, துணைத்தலைவர் பிருந்தா-தேவி ஆகியோர் கொடியசைத்து, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். டவுன் பஞ்., செயல் அலுவலர் ராஜசேகரன், கவுன்-சிலர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை