உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் விவசாயி பலி

விபத்தில் விவசாயி பலி

ராசிபுரம்;நாமகிரிப்பேட்டை அடுத்த வேலம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் பன்னீர்செல்வம், 50. இவரது உறவினர் வேல்முருகன், 57; இருவரும் விவசாயிகள். நேற்று இரவு, 8:00 மணியளவில் ராசிபுரத்தில் இருந்து இருவரும், 'டிவிஎஸ்' மொபட்டில் வேலம்பாளையம் சென்று கொண்டிருந்தனர். காக்காவேரி அருகே செல்லும்போது, எதிரே வந்த தாய்சேய் வாகனம் பன்னீர்செல்வம் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வேல்முருகனை அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை