உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

சேந்தமங்கலம்: கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை மூலிகைகள் நிறைந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு, வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாளில், தமிழகத்தின் பல்‍வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள், இங்குள்ள ஆகாய கங்கை நீர்‍வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவிகளில் குளித்து விட்டு, பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். கடந்த, 2 மாதத்திற்கு முன் ‍கொல்லிமலையில் பெய்த கன மழையால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்ததுடன், பிரசித்தி பெற்ற கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ