உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போக்குவரத்து ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

போக்குவரத்து ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர், நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். நாமக்கல் - பரமத்தி சாலை, அரசு போக்குவரத்து பணிமனை முன், தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில் நடந்த போராட்டத்திற்கு, சங்க உதவித்தவைர் வரதராஜன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி போராட்டத்தை துவக்கி வைத்தார். அதில், போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிடவேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி