உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு

குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு

ராசிபுரம்: ராசிபுரம் தாலுகாவாக இருப்பதால் பெரிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. அதுமட்டுமின்றி, இங்கு அதிகளவு பள்ளி, தனியார் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. அதேபோல், நெசவு, விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்காக, பஸ் ஸ்டாண்டில் இருந்து அதிக பயணிகள் வெளிய சென்று வருகின்றனர்.அக்னி நட்சத்திரம் எனப்படும், கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் போதுமான குடிநீர் வசதியில்லை. வெயில் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் கடைகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி குடித்து வருகின்றனர். தி.மு.க., சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலிலும் தண்ணீர் மதியத்திற்குள் காலியாகி விடுகிறது. எனவே, காலை முதல் மாலை வரை பொதுமக்கள், பயணிகள் தடையின்றி குடிநீர் அருந்த நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை