உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் பழுது நீக்குவோர் நல சங்க ஆலோசனை கூட்டம்

டூவீலர் பழுது நீக்குவோர் நல சங்க ஆலோசனை கூட்டம்

நாமகிரிப்பேட்டை,: நாமகிரிப்பேட்டை ஒன்றிய இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. இதில் வேலை செய்வோருக்கான இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் நல சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒன்றிய சங்கத்திற்கான ஆலோசனை கூட்டம், நேற்று நாமகிரிப்பேட்டையில் நடந்தது. தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் குப்புசாமி வரவேற்றார். பொருளாளர் முனியப்பன் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் சங்கர் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், பி.எஸ்.3 வாகனங்களை சர்வீஸ் செய்வதற்காக பயிற்சி மற்றும் உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ