உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காஸ் கசிந்து தீ விபத்து வேன், டூவீலர் நாசம்

காஸ் கசிந்து தீ விபத்து வேன், டூவீலர் நாசம்

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே செருக்கலை புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மணி, 50. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆம்னி வேனை தனது வீட்டின் அருகே நிறுத்தி வீட்டு உபயோக சிலிண்டரிலிருந்து காருக்கு காஸ் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரிலிருந்து காஸ் கசிந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்ததில், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரிலும் தீ பரவி எரிந்தது.இதுகுறித்து, நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் ஆம்னி வேன், டூவீலர் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்து குறித்து, நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை