உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வளர்பிறை அஷ்டமி பூஜை

வளர்பிறை அஷ்டமி பூஜை

மோகனுார்: மோகனுார் அடுத்த அணியாபுரத்தில், பைரவி சமேத சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், வைகாசி வளர்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு, நேற்று நடந்தது.காலை, 10:00 மணிக்கு, மூலவர் பைரவி சமேத சொர்ண ஆகர்ஷண பைரவர், உற்சவ கால பைரவருக்கு பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், பச்சரிசி மாவு கரைசல், நெல்லிப்பொடி, திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி, சொர்ணம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தேங்காய், வெண்பூசணிக்காய் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை