உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் அருகே இளம் பெண் எரித்து கொலை

ராசிபுரம் அருகே இளம் பெண் எரித்து கொலை

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், 140 ஏக்கரில் ஏரி உள்ளது. இதன் கரையில், மாலை நேரத்தில் குடிமகன்கள் மது குடித்து விட்டு கும்மாளம் அடிப்பது வழக்கம். ஊர் ஒதுக்குப்புறத்தில் ஏரி உள்ளதால், ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். சாலைகளும் வெறிச்சோடி காணப்படும்.ஏரிக்கு அருகில் வசிப்பவர் விவசாயி பழனிவேல், 60. நேற்று இவர், மாடுகளை மேய்ப்பதற்காக ஏரிக்கு சென்றார். அப்போது ஏரிக்கரையில் எரிந்த நிலையில், பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு, 20 வயது இருக்கும். இறந்த பெண் அணிந்திருந்த நகைகள், கொலுசு, மெட்டி அப்படியே இருந்ததால், நகைக்காக கொலை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.சம்பவ இடத்தில் நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், டி.எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ