வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
குமாரபாளையம், குமாரபாளையம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; பார்மசி நடத்தி வருகிறார். கடந்த, 8ல் நண்பரின் மகன் திருமணத்திற்காக, இவரும், இவரது மனைவியும் திருச்சி சென்றனர். நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு வீடு திறந்து கிடப்பதாக, அருகே வசிக்கும் மோகன் என்பவர் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார்.உடனடியாக திருச்சியில் இருந்து வந்த ராஜேந்திரன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது அறிந்த அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.