உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தில் 33 எஸ்.எஸ்.ஐ.,க்கள் உள்பட 180 பேர் அதிரடி இடமாற்றம்

மாவட்டத்தில் 33 எஸ்.எஸ்.ஐ.,க்கள் உள்பட 180 பேர் அதிரடி இடமாற்றம்

நாமக்கல்: மாவட்டத்தில், 33 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 18 பெண் போலீசார் உள்பட, மொத்தம், 180 போலீசார் ஒரே நாளில் இடமாற்றம் செய்து, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில், ஆண்டுதோறும் போலீசாருக்கான பணி இடமாறுதல் உத்தரவு வெளியிடப்படும். அதில், மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எஸ்.எஸ்.ஐ., முதல், 2-ம் நிலை போலீசார் வரை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பணியிட மாறுதல் உத்தரவு விரைவில் வெளியிடப்படுமா என போலீசார் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.எஸ்.ஐ.,க்கள் உள்பட, 180 பேருக்கு இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ஒரே போலீஸ் ஸ்டேஷனில், மூன்று ஆண்டுகள் பணியாற்றி வரும், எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசார் மற்றும் விருப்ப மாறுதல் கேட்டவர்கள், புகாருக்கு உள்ளான நபர்கள் என, ஒரே நாளில், 180 பேருக்கு இடமாறுதல் அளித்து, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் எஸ்.எஸ்.ஐ., வெங்கடேசன், நல்லிபாளையத்திற்கும்; திருச்செங்கோடு டவுன் சிறப்பு எஸ்.ஐ., ரவிக்குமார், திருச்செங்கோடு போக்குவரத்து பிரிவிற்கும்; வெப்படை பழனிசாமி, குமாரபாளையத்திற்கும்; பள்ளிப்பாளையம் மணிசேகரன், திருச்செங்கோடு ரூரலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மோகனுார் செல்வராஜ், புதுச்சத்திரத்திற்கும்; ப.வேலுார் சிவக்குமார், பரமத்திக்கும்; மோகனுார் நவனீதன், பரமத்திக்கும்; பள்ளிப்பாளையம் ரவி, நல்லுாருக்கும்; ஆயில்பட்டி ராஜா, நாமக்கல்லுக்கும் என, மொத்தம், 33 எஸ்.எஸ்.ஐ.,க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 18 பெண் போலீசார், 36 ஏட்டுகள், 80 போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிரிவில் பணியாற்றி வந்த, 13 பேரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியவர்கள் இடமாற்றம் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இதில், குளறுபடி ஏற்பட்டுள்ளதாக போலீசார் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை