நாமக்கல்: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 3 நாட்களில், 192.40 மி.மீ., மழை பெய்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை, பகல், இரவு என, மாறி மாறி பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் நகரில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனால், மழை வரும் என எதிர்பார்க்கப்பட்-டது. அதன்படி, மதியம், 1:00 மணிக்கு, மழை பெய்ய துவங்கி-யது. தொடர்ந்து, 2:15 மணிக்கும், 3:00 மணிக்கும் என, விட்டு விட்டு மழை பெய்தது.அதேபோல், மோகனுார் பகுதியில், நேற்று மதியம், 12:30 மணிக்கு, பெய்த மழை, 15 நிமிடம் நீடித்தது. தொடர்ந்து, 2:00 முதல், 2:20 மணி வரையும், மாலை, 3:15 முதல், 3:30 மணி வரையும் என, விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழை கார-ணமாக, ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். குமாரபாளையம்குமாரபாளையத்தில், நேற்று மதியம், 1:00 மணிக்கு திடீரென மழை பெய்தது. குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், தெற்கு காலனி, குப்பாண்டபாளையம், சாணார்பாளையம், தட்டாங்-குட்டை உள்ளிட்ட பகுதிகளில், 3 மணி நேரம் கன மழை பெய்-தது. இதனால், சாலையில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.திருச்செங்கோடுதிருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் சாரல், துாறல், மிதமான மழை, கன மழை என, விட்டு விட்டு மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதால், பகலி-லேயே வீட்டுக்குள் மின்விளக்குகளை எரியவிடும் நிலை ஏற்பட்-டது. மக்கள், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பள்ளிப்பாளையம்பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் ரயில்வே சுரங்கப்-பாதை உள்ளது. இதன் வழியாக திருச்செங்கோடு, கொக்கராயன்-பேட்டை, சோழசிராமணி, மொளசி, தாஜ்நகர், எஸ்.பி.பி., காலனி, ஆயக்காட்டூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு ஏராள-மான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், நேற்று மதியம், 1:30 மணி முதல், 2:30 மணி வரை, பள்ளிப்பா-ளையம் சுற்று வட்டாரத்தில் மழை பெய்தது. இதனால், காவிரி ரயில்வே சுரங்கபாதையில், குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.கொல்லிமலைதொடர் மழையால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்-வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி மற்றும் சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்-சிக்கு முதியவர்கள், குழந்தைகள் செல்வது கொஞ்சம் கடினம் என்பதால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு அருகில் சிற்றருவி ஒன்று உள்ளது. 20 படிகள் மட்டுமே இறங்கி சென்றால் போதும். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாத சுற்றுலா பயணிகள், சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனர்.நேற்று முன்தினம், காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரம் பெய்த மழையளவு மி.மீ., வரு-மாறு: மங்களபுரம், 7.40, நாமக்கல், 11, ப.வேலுார், 16, புதுச்சத்-திரம், 5, ராசிபுரம், 10, சேந்தமங்கலம், 4.60, திருச்செங்கோடு, 4, கலெக்டர் அலுவலகம், 4, கொல்லிமலை, 9 என, மொத்தம், 71 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கடந்த, 18ல், மாவட்டம் முழுவதும், 44.30 மி.மீ., மழை பெய்-துள்ளது. அதேபோல், கடந்த, 20ல், 77.10 மி.மீ., என, மூன்று நாட்களில், மாவட்டம் முழுவதும், 192.40 மி.மீ., மழை பெய்-துள்ளது குறிப்பிடத்தக்கது.