உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கைத்தறி சங்க காசாளர் வீட்டில் 20 பவுன் கொள்ளை

கைத்தறி சங்க காசாளர் வீட்டில் 20 பவுன் கொள்ளை

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, முத்துக்காளிப்பட்டி ஸ்ரீராம்நகர் குடியிருப்பை சேர்ந்தவர் கோமதி, 48; இவர், வெண்ணந்துாரில் உள்ள கைத்தறி சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து, இரு மகள்களுடன் முத்துக்காளிப்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கோமதி பணிக்கு சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த, 20 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர்.பணி முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பிய கோமதி, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், எஸ்.ஐ.,க்கள் சுரேஷ், கீதா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ