உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஊதுபத்தி கம்பெனி பாய்லர் வெடித்து 3 பேர் காயம்

ஊதுபத்தி கம்பெனி பாய்லர் வெடித்து 3 பேர் காயம்

ராசிபுரம் :ராசிபுரம் அருகே, ஊதுபத்தி கம்பெனி பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 3 பேர் காயமடைந்தனர். ராசிபுரத்தில் இருந்து மல்லுார் செல்லும் வழியில், அல்லேரி முனியப்பன் கோவில் உள்ளது. இதன் அருகே பி.மேட்டூர் பகுதியில் தனியார் ஊதுபத்தி கம்பெனி செயல்படுகிறது. இதில், 10 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று மதியம், 1:00 மணியளவில் கம்பெனியில் இருந்த ஊதுபத்தி பாய்லர் எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில், பாய்லரில் இருந்த கண்ணாடிகள் அப்பகுதியில் சென்றவர்கள் மீது பட்டது. இதில், பல்லவன் நாயக்கன்பட்டி சுப்பிரமணி மனைவி ரீனா, 43, அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி கவிதா, 45, கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த ரவி மகன் விஷ்ணு, 19 ஆகிய, 3 பேர் காயமடைந்தனர். இவர்கள், 3 பேரும் மல்லுார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீயை அங்கிருந்தவர்கள் அணைத்தனர். விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !