உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொழிலாளி வீட்டில் 43 பவுன் திருட்டு; சேலத்தை சேர்ந்த 2 பேருக்கு சிறை

தொழிலாளி வீட்டில் 43 பவுன் திருட்டு; சேலத்தை சேர்ந்த 2 பேருக்கு சிறை

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை அன்னை நகரை சேர்ந்த தம்பதியர் கோபால், 58, மாது, 50; கூலித்தொழிலாளிகள். இவர்களது வீட்டில், கடந்த, 6 இரவு, 12:30 மணிக்கு, முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 43 பவுன் நகை, 50,000 ரூபாய் ரொக்கம், 2 மொபைல் போன் என, அனைத்தையும் திருடிக்கொண்டு டூவீலரில் தப்பினர். இதுகுறித்து புகார்படி, எலச்சிபாளையம் எஸ்.ஐ.,க்கள் ரஞ்சித்குமார், பொன்குமார் தலைமையில், இரண்டு தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று, மல்லசமுத்திரம் அருகே, ஆத்துமேடு டாஸ்மாக்கில் இருந்த திருடர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், 19, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த முருகேசன், 21, என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த, 21 பவுன் நகை, டூவீலரை பறிமுதல் செய்தனர். மோகன்ராஜ் மீது, கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரையும், திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி