உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏ.டி.எம்., கொள்ளையர்கள் 6 பேருக்கு சிறை

ஏ.டி.எம்., கொள்ளையர்கள் 6 பேருக்கு சிறை

திருச்செங்கோடு:கேரளா ஏ.டி.எம்.,களில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, நாமக்கல் வழியாக தப்ப முயன்றபோது சிக்கிய வடமாநில கொள்ளையர்கள் ஆறு பேருக்கு சிறை தண்டனை விதித்து, திருச்செங்கோடு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள மூன்று ஏ.டி.எம்.,களில், 2024 செப்., 27ல் வட மாநில கொள்ளையர்கள் பணம் கொள்ளையடித்தனர். அந்த பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்டவற்றை, கன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வழியாக தப்ப முயன்றனர். அவர்களை தடுக்க முயன்ற போது, வடமாநில கொள்ளையன் ஒருவன், போலீசாரை கடப்பாரையால் குத்த முயன்றான். பதிலுக்கு போலீசார் சுட்டபோது கொள்ளையன் ஜூமா ந்தின் என்பவர் உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற கொள்ளையன் அசார் அலியை காலில் சுட்டு பிடித்தனர். மேலும், கன்டெய்னருக்குள் பதுங்கியிருந்த இர்பான் சக்கூர், 32, சவுக்கீன் கான், 23, முகமது இக்ரம், 42, ஷபீர்கான், 26, முபாரக், 19, ஆகிய ஐந்து பேரை போலீசார் பிடித்த னர். அவர்கள் மீது, 'போலீசார் வாகனத்தை நிறுத்தியபோது, நிறுத்தாமல் சென்றது; வாகனங்களை சேதப்படுத்தியது; பொது சொத்துக்களை சேதப்படுத்தியது; போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்றது' என, நான்கு பிரிவுகளி ல் வழக்குப்பதிவு செய்தனர். இந் த வழக்கு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் விசாரணை நடந்து முடிந்த நிலையில் , நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் , இர்பான் சக்கூர், அசார்அலி ஆகியோருக்கு, 10 ஆண்டு சிறை, தலா, 5,000 ரூபாய் அபராதம், ஷபீர்கான், சவுக்கீன்கான், முகமது இக்ரம், முபாரக் ஆகியோருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, தலா, 3,000 ரூ பாய் அபராதம் விதித்து தீர்ப்ப ளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி