உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முட்டை வியாபாரியிடம் ரூ.98,000 பறிமுதல்

முட்டை வியாபாரியிடம் ரூ.98,000 பறிமுதல்

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கண்ணுார்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல், 26. இவர், நேற்று முட்டை லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல் சென்றார். அங்கு முட்டைகளை இறக்கிவிட்டு, அதற்கான பணம், 98,500 ரூபாயை பெற்றுக்கொண்டு சரக்கு வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நாமக்கல், முதலைப்பட்டி பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழனிவேல் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம், 98,500 ரூபாய்-க்கு உரிய ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, நாமக்கல் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்