உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 22. இவர், நேற்று ஈச்சவாரியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். பின், வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். விராலிப்பட்டி அரு‍கே சென்றபோது எதிரே வந்த, 'மகேந்திரா' பிக்கப் வேன் சதீஸ்குமார் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சதீஸ்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை