| ADDED : ஜன 03, 2024 12:53 PM
நாமக்கல்: ''நுகர்வோர் சட்டங்கள் குறித்து, வக்கீல்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, வக்கீல்கள் சங்க மாநில தலைவர் மாரப்பன் பேசினார்.நுகர்வோர் பூங்கா என்ற இணைய இதழ் தொடக்க விழா, நாமக்கல்லில் நடந்தது. அமைதிக்கான உத்திகள் அமைப்பின் இயக்குனர் மனோகரன் தலைமை வகித்தார்.நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் அய்யாவு, நாமக்கல் மாவட்ட கூடுதல் அரசு வக்கீல் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன தலைவர் தங்கராஜூ துவக்கி வைத்தார். தமிழகம், புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், தமிழக பார் கவுன்சில் இணை தலைவருமான மாரப்பன், நுகர்வோர் பூங்கா இணைய இதழை வெளியிட்டு பேசியதாவது:மனிதன் பிறந்தது முதல், இறப்பு வரை, ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராக இருப்பதால், நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த, நுகர்வோர் பூங்கா இதழ் சிறப்பாக செயல்பட வேண்டும். இளம் வக்கீல்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் தொடர்புடைய அனைத்து சட்டங்களுக்கும், வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.வக்கீல் சங்க செய லாளர் ராஜவேலு, நுகர்வோர் பூங்கா இதழின் துணை ஆசிரியர்சின்னச்சாமி, துணை ஆசிரியர் ராஜ், வக்கீல்கள்சத்தியமூர்த்தி,குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.