உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆலாம்பாளையம் பகுதிக்கு சுகாதார நிலையம் தேவை

ஆலாம்பாளையம் பகுதிக்கு சுகாதார நிலையம் தேவை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில், 15 வார்டுகள் உள்ளன. நாளுக்கு நாள் குடியிருப்பும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. டவுன் பஞ்., பகுதியில் சுகாதார நிலையம் இல்லாததால், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தால், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை அல்லது கொக்கராயன்-பேட்டை, காடச்சநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது. ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து, 11 கி.மீ., சுற்றளவு கொண்டது. எனவே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகு-தியில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை