மேலும் செய்திகள்
மணல் கடத்திய வேன் பறிமுதல்
23-Nov-2024
மோகனுார்: மோகனுார் அடுத்த நவலடியான் கோவில் பின்புறம், காவிரி-யாற்றில் மணல் கடத்துவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மோகனுார் எஸ்.ஐ., கவிப்பிரியா தலைமையிலான போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்-போது மினி ஆட்டோவில் சாக்கு மூட்டையில் மணல் இருந்-ததை கண்டுபிடித்தனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் ஆட்-டோவை விட்டுவிட்டு மணல் கடத்தியவர்கள் தப்பி ஓடினர். மணலுடன் இருந்த மினி ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
23-Nov-2024