மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிஷா வாலிபர் சிக்கினார்
05-Oct-2025
திருச்செங்கோடு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைப்பாதையில், நேற்று காலை, 6:00 முதல் 10:00 மணி வரை, முன்னறிவிப்பின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், வைகாசி விசாக தேர் திருவிழா, கடந்த, 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 23 முதல், 26 வரை திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 27 அதிகாலை, சுவாமி மலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, பக்தர்கள் மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு மலைப்பாதை வழியாக சுவாமி தரிசனத்துக்கு சென்ற பக்தர்களை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தடுத்து நிறுத்தினர். காலை, 10:00 மணி வரை யாரையும் அனுமதிக்கவில்லை.காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவித்தனர். பாதையில் ஏதாவது மண் சரிவா? அசம்பாவிதமா? என, பரபரப்பாக பொதுமக்கள் பேசிக்கொண்டிருந்தனர். இதில், சில பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மீண்டும் காலை, 10:30 மணிக்கு மேல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து, கோவில் செயல் அலுவலரும், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருமான ரமணிகாந்தனிடம் கேட்ட போது, ''ஆர்.டி.ஓ., சுகந்தி கொடுத்த கடிதத்தின்படி, சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் எடுக்க வேண்டி இருந்ததால், பக்தர்கள் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை, 10:00 மணிக்கு மேல், எப்பொழுதும் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்,'' என்றார்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'முன்னறிவிப்பின்றி வாகனங்களை நிறுத்தம் செய்தால், வெளியூரில் இருந்து சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும், அதிகாரிகள் வாகன நிறுத்தம் செய்தது கண்டிக்கத்தக்கது' என்றனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025