உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாரில் தகராறு: 3 பேர் கைது

பாரில் தகராறு: 3 பேர் கைது

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ஸ்டாலின் நகரை சேர்ந்வர் ஜெகநாதன் மகன் சத்தீஸ்வரன், 26; இவரது நண்பர், அப்பாவு மகன் கவுசிக்குமார், 25; இவர்களது நண்பர்கள் பகத்சிங், 28, குமார், 30, உள்ளிட்ட, நான்கு பேரும் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டியில் உள்ள டாஸ்மார்க் பாரில், நேற்று முன்தினம் மது அருந்தினர். மூவரும், குமாரிடம், 'மீண்டும் சரக்கு வேண்டும்; நீ வாங்கிக்-கொடு' என, கேட்டுள்ளனர். இதில், ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், மூவரும் சேர்ந்து, குமாரை தாக்கியுள்-ளனர். இதில் காயமடைந்த குமார், ராசிபுரம் அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்றார். குமார் அளித்த புகார்படி, ஆயில்-பட்டி போலீசார் சத்தீஸ்வரன், கவுசிக்குமார், பகத்சிங் ஆகி-யோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ