உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவையும்,தாயையும் கொன்ற ‛பாசக்கார பேரன் கைது

சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவையும்,தாயையும் கொன்ற ‛பாசக்கார பேரன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல்:நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார். அதனை சாப்பிட்ட தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oxtvuu1m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாமக்கல், எருமப்பட்டி தேவராயபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 67. இவரது பேரன் பகவதி 20, ஏப்., 30ம் தேதி கொசவம்பட்டி வீட்டில் இருந்த தாய் நதியா (40),வுக்கும் சண்முகத்திற்கும் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்தார். இருவருக்கும் வயிற்று வலி, வாந்தி வரத்தொடங்கியது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று( மே 02) இரவு சண்முகம் இறந்தார். நதியா, சண்முகம் சாப்பிட்டு வைத்த மீதி உணவு சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அதேசமயம் பகவதி, ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பகவதி வாங்கி சென்ற உணவில், எவ்வாறு விஷம் கலந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். பகவதி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நான் தான் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என பகவதி ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போலீசாரிடம், ‛‛ 2 ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்தேன். அதனை தாயாரும், தாத்தாவும் ஏற்கவில்லை. இதனால், இரண்டு குடும்பத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. தாயார் நதியாவும் என்னிடம் பாசமாக இல்லை. ஒரு பெண்ணுடன் உள்ள தவறான பழக்கம், ஆபாச படங்களை பார்ப்பது குறித்து தாத்தாவும், தாயாரும் கண்டித்தனர். இதனால், விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன். நாமக்கல்லில் உள்ள கடையில் கடந்த 27ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி, 30ம் தேதி சிக்கன் ரைசில் கலந்து கொடுத்தேன். அதனை இருவர் மட்டுமே சாப்பிட்டனர். மற்றவர்கள் சாப்பிடவில்லை'' என கூறினார். இதனையடுத்து பகவதியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி பலியாகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kumar Kumzi
மே 03, 2024 22:28

விடியலின் திராவிஷ மாடல் அரசின் சாதனை ஹீஹீஹீ


KayD
மே 03, 2024 18:38

poison கார பேரன்


viji kumar
மே 03, 2024 18:14

டாஸ்மாக் என்று சொல்ல வேண்டாம் அரசு மதுபானக் கடை என்று சொல்லலாமே


ponssasi
மே 03, 2024 18:01

இவன் செய்த தவறுக்கு ஓட்டல் உரிமையாளருக்கு ஏன் தண்டனை?


ponssasi
மே 03, 2024 18:01

இவன் செய்த தவறுக்கு ஓட்டல் உரிமையாளருக்கு ஏன் தண்டனை?


Diraviam s
மே 03, 2024 16:31

பாசக்கார பேரன் இல்லை மோசக்காரபேரன்


அசோகன்
மே 03, 2024 16:29

அந்த கொடூர தறுதலையை அவர் இவர்னு தினமலர் சொல்வது கேவலமாக உள்ளது......... விட்டா அவனுக்கு அவார்ட் வாங்கி கொடுத்துடுவாங்க போல


Natarajan Ramanathan
மே 03, 2024 16:12

வி சி க புல்லிங்கோ


Bhakt
மே 03, 2024 21:55

ஆமை கரி அண்ணனோட தும்பியா கூட இருக்கலாம்


Palanisamy Sekar
மே 03, 2024 15:30

போதையில் டாஸ்மாக்கில் என்று உயர்ந்து இப்போது ஆபாசப்படங்களை பார்ப்பதில் வந்த கோபமே கொலைக்கு காரணம் இதெல்லாம் ஆட்சியாளர்களின் குற்றம்தான் அரசை நடத்த இந்த டாஸ்மாக் தேவையா என்று கேள்விகேட்டு போராடிய ஸ்டாலின் இன்றைக்கு டாஸ்மாக் இல்லை என்றால் தமிழக அரசே நடத்த முடியாது என்கிற அவல நிலைக்கு வந்துவிட்டதே இன்றைய இளைஞர்கள் தங்களை அழித்துக்கொண்டு வருகின்றார்கள் என்பதன் உதார்ணம் இதுதான் தாய்தந்தை எப்படித்தான் பொத்திப்பொத்தி வளர்த்தாலும் கூட வெளியே தாராளமாக கிடைக்கும் போதையில் சீரழிகின்றார்கள் இன்றைய இளைஞர்கள் இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் குறையே சொல்லமுடியாத அளவுக்கு நடக்கும் ஆட்சி என்கிற சுயதம்பட்டம் நாறுகின்றது


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை