உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த தின விழா

அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த தின விழா

குமாரபாளையம்: குமாரபாளையம், வேமன்காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. பாரதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, சதுரங்க போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை தலைமையாசிரியர் (பொ) மாதேஷ் வழங்கினார். தமிழ் ஆசிரியர் குமார் நன்றி கூறினார். ஆசிரியர்கள் முத்து, மேனகா, பார்வதி, ராதா, அம்சா, பழனியம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை