உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாரதிய மஸ்துார் சங்க பொதுக்குழு கூட்டம்

பாரதிய மஸ்துார் சங்க பொதுக்குழு கூட்டம்

நாமக்கல், நாமக்கல்லில், பாரதிய மஸ்துார் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட அமைப்பாளர் ரத்தினம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சங்கர், தென்பாரத துணை அமைப்பு செயலாளர் ராஜீவன், இணை அமைப்பாளர் பாலசுப்ரமணியம், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நிலவும், ஊதிய முரண்பாடு களைந்து உயர்மட்ட அறிக்கை மற்றும் உயர்நீதிமன்ற ஆணைபடி அரசு முறை ஊதியம் வழங்க வேண்டும். அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொறுப்பாளர் பிரபு, பொதுச் செயலாளர் சவுந்தரராஜன், சங்க பொறுப்பாளர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை