| ADDED : டிச 08, 2025 08:59 AM
நாமகிரிப்பேட்டை: தமிழகத்தில், வரும், 2026 சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பா.ஜ., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது, அவர்களுக்கான பயிற்சியளிப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, பூத் மதிப்பீடு பணியை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் நியமிக்கப்பட்டுள்ள, பா.ஜ., நிர்வாகிகள் குறித்த விபரம், கடந்தாண்டு எந்தெந்த கட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறித்த விபரங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பூத் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்கான, வாட்ஸாப்பில் அனுப்ப வேண்டும். முதல்கட்டமாக, நிர்வாகிகளிடம், பூத் மதிப்பீடு விண்ணப்பம் நேற்று வழங்கப்பட்டது. ஒன்றிய தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.