உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரதராஜ பெருமாள் கோவிலில் பா.ஜ., சிறுபான்மை அணி தூய்மை

வரதராஜ பெருமாள் கோவிலில் பா.ஜ., சிறுபான்மை அணி தூய்மை

நாமக்கல் : நாமக்கல் வரதராஜ பெருமாள் கோவிலில், பா.ஜ., சிறுபான்மையினர் அணி சார்பில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.வரும், 22ல் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பா.ஜ., தலைமையின் அறிவுறுத்தல்படி, 'ஆலயமெங்கும் துாய்மைப்பணி' மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் அன்புநகரில் உள்ள, வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், பா.ஜ., சிறுபான்மையினர் அணியின் மாநில செயலாளரும், சேலம் பெருங்கோட்ட இணை பொறுப்பாளருமான ஷாஜஹான் தலைமையில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அலாவுதீன், நாசர்பாஷா, அன்ஷர்பாஷா, சகிலா, பால்ராஜ், ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள், கோவிலில் துாய்மைப்பணி மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை