நாமக்கல்: 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், இரண்டாம் கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 ஊராட்சிகளில், 69 இடங்களில் நடக்கி-றது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட-ரங்கில், கலெக்டர் உமா தலைமையில், இரண்டாம் கட்டமாக கிராம ஊராட்சிகளில், 'மக்-களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடத்துவதற்-கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ-சனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் உமா கூறுகையில், ''தமி-ழக முதல்வர், கடந்த, 2023ல், 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் முதல் கட்டமாக நடந்த முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது, 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. 2ம் கட்டமாக, வரும், 11 முதல், ஆக., 27 வரை, காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும், 69 இடங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., சுமன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.