சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லை
பள்ளிப்பாளையம்: ''சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லை,'' என, ஈரோடு எம்.பி., தெரி-வித்தார்.பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட பள்ளிப்பாளையம் அக்ர-ஹாரம் பஞ்., பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்க விழா நடந்தது.ஈரோடு எம்.பி., பிரகாஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ''சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லை. மத்திய அரசிடம் இந்த கோப்பு கிடப்பில் உள்ளது. ஆனங்கூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மக்களை தொடர்ந்து சந்தித்து, குறைகளை கேட்டு வருகிறோம். பள்ளிப்பாளையம் ஆற்றோரம் மக்களுக்கு நிலமும், பட்டாவும் வழங்க தயார் நிலையில் உள்ளது. பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், 20 ஆண்டாக எந்த வளர்ச்சியும் செய்யவில்லை. எம்.பி., என்ற முறையில் வளர்ச்சி திட்டங்கள் செய்யப்படும்,'' என்றார்.