உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் தேர்த்திருவிழா கோலாகலம்

கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் தேர்த்திருவிழா கோலாகலம்

நாமக்கல்: நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்-கியது. தொடர்ந்து, 17 முதல், நேற்று முன்தினம் வரை, தினமும் மாலை, 6:00 மணிக்கு நவநாள் திருப்பலி நடந்தது.நேற்று காலை, 8:30 மணிக்கு, மதுரை உயர்மறை மாவட்ட அருட்தந்தை சார்லஸ் ஹெஸ்டன் தலைமையில், புதுநன்மை, உறுதிபூசுதல் விழா, ஆடம்பர கூட்டுத்திருப்பலி கோலாகலமாக நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, திருவிழா கூட்டுத்திருப்பலி, அமல்ராஜ் மகிமைராஜ் தலைமையில் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, இக்னேசியஸ் பிதேலிஸ் தலைமையில், ஆரம்பர தேர் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மின் அலங்காரத்தில் எழுந்தருளிய கிறிஸ்து அரசர், முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார்.வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும் புனிதரை வணங்கினர். ஏற்பாடுகளை, பங்கு தந்தை தாமஸ் மாணிக்கம், அருட் சகோதரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ